ஆண்கள் எல்லோரும் “யூ டூ” புரூட்டஸ்தான்!: ஜெயக்குமார் அதிரடி பேச்சு

நான் மைக் குமார் அல்ல.. மைக் டைசன்!” என்று  டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதில் இருந்து..

“மீ டூ  விவகாரத்தை போல் ஆண்களும் வீ டூ  என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் எல்லோருமே “யூ டூ  ப்ரூட்டஸ்” தான்.

100 வருடங்கள் கழித்தும் அதிமுக ஆட்சியில் இருக்க கூடிய இயக்கமாகும். ஜெயலலிதா  அவர்கள் ஆறு முறை முதல்வராக இருந்து மக்களின் உணர்வுகளை நிறைவேற்றி மக்கள் மத்தியில் மிக பெரிய தலைவராக இருக்கிறார்.

100 வருடங்கள் ஜெயலலிதாவின்   அரசு நிச்சயம் நிலைக்கும் .

அதிமுக எனும் எஃகு கோட்டையை தகர்க்க நினைகிறவர்கள் தலைகள் தான் சுக்கு நூறாகும்.

2019 ல் சட்டமன்ற தேர்தல் வரும் என்பது ஸ்டாலின் கனவு.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே 2019 ல் வரும்.

திமுக தொண்டர்களே 2021 ல் சட்டமன்ற தேர்தல் வருவதை தான்  விரும்புவார்கள்

ஸ்டாலினின் முதல்வர் கனவு அவரை தூங்க விடாத காரணத்தால் அவருடைய உடல்நிலையை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது நாளை நமதே நாற்பதும் நமதே என்ற அடிப்படையில் தேர்தலை சந்திப்போம்.

முதல்வர் மீதான சிபிஐ விசாரணை தொடர்பாக தினகரன் தான் பயப்படுவதாக விமர்சித்து மைக் குமார் என்று கூறுகிறார்.

மைக் முன்னால் நான்  பேசியதால் மைக் குமார் கிடையாது.. நான் மைக் டைசன் நாக்கவுட் தான்.  இப்போது கூட என்னால் பாக்சிங் செய்யது வெற்றி பெற முடியும்

இலங்கை அரசு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

மத ரீதியான சிக்கல்களுக்கு வன்முறை தீர்வாகாது தேவ சம்போடு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.