டில்லி

புல்வாமா தாக்குதல் போல் மேலும் தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி இந்தியா காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை அழித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை 12 மிராஜ் விமானங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குண்டு வீசி முழுமையாக அழித்துள்ள்து.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, “புல்வாமாவில் நடந்தது போல் இன்னொரு தாக்குதல் நடக்கக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக உள்ளோம்.  இந்நிலையில் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் நாட்டில் பல இடங்களில் மேலும் தாக்குதல் நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. அந்த தாக்குதலை நடத்த திட்டமிட்ட குழுக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட் பகுதியில் முகாம் இட்டுள்ளது கண்டறியப்பட்டது.

ஏராளமான தீவிரவாதிகள் அங்கு மறைந்து இருந்தனர்.  இந்திய வீரர்கள் அவர்களை எதிர்த்து போரிட்டால் உயிரிழப்பு நேரிடும் என்பதால் அதை தடுக்க நினைத்தது. எனவே பாகிஸ்தானிடம் ஜெய்ஷ் ஈ முகமது குழுவினர் தாக்குதல் திட்டம் குறித்தும் அவர்களின் முகாம் குறித்தும் தகவல்கள் அளிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே ஜெய்ஷ் ஈ முகமது நடத்த திட்டமிட்டுள்ள தற்கொலைப்படை தாக்குதலை நிறுத்த இந்தியா முடிவு செய்தது.  அதை ஒட்டி இன்று அதிகாலை விமானப்படை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாலாகோட் பகுதியில் பயிற்சி பெற்று வந்த ஏராளமான ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாதிகள் முழுமையாக அளிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில்ல் இருந்த பயிற்சியாளர்கள், மூத்த பயங்கரவாதிகள் உள்ளிட்ட அனைவரும் அழிக்கப்பட்டுள்ளனர்.“ என தெரிவித்துள்ளார்.