சென்னை

ருடத்தில் இரு தினங்கள் நிழலற்ற தினம் என வழங்கப்படுவதின் விளக்கம் இதோ

நிழலற்ற தினம் என்பது ஒரு ஆச்சரியமான விவரமாக இருக்கும்.   நிழல் இல்லாமல் எவ்வாறு இருக்கும் என்பதே கேள்வி.   ஒரு சிலருக்கு அந்த தினம் முழுவதும் நிழல் எங்கே போகும் என்பதும் ஒரு சந்தேகமாக இருக்கும்.    ஆனால் உண்மையில் அந்த தினம் முழுவதும் நிழல் இல்லாமல் இருக்காது.

பூமத்திய ரேகை என்பது பூமியை வடக்கு தெற்கு என இரு பகுதிகளாக பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடு ஆகும்.   பூமி லேசாக சாய்ந்திருப்பதால் பூமி சூரியனை சுற்றி வரும் போது சூரியன் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் பயணம் செய்வது போல் உள்ளது.  இவ்வாறு வடக்கு பக்கம் செல்வது உத்திராயணம் எனவும் தெற்கு பக்கம் செல்வது தட்சிணாயணம் எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறு சூரியன் வடக்கு திசைக்கு அருகில் வரும் போது 23.5 டிகிரி வரை சூரியன் அதிகம் அருகில் உள்ளது.   இதை கோடைக்காலம் என்கிறோம்.   இவ்வாறு சூரியன் 23.5 டிகிரி வரை அருகில் வரும் போது ஒரு குறிப்பிட்ட நாளில் பூமியின் குறிப்பிட்ட இடத்தில் மனிதர்களுக்கு நேராக மேலே இருக்கும்.

அந்த நாளில் மதியம் சுமார் 12 மணிக்கு தலைக்கு மேல் வருவதால் மனிதர்களின் நிழல் அவர்களின் கால்களுக்குள்ளேயே அடங்கி விடும்.   இதே போல 23.5 டிகிரியை தாண்டியதும் பூமியின் தெற்கு பக்கம் சூரியன் நெருங்கி வர ஆரம்பிக்கும்.   இந்த நேரத்திலும் ஒரு நாள் சூரியன் தலைக்கு மேலே வருவதால் அன்றும் மதியம் 12 மணிக்கு நிழல் கால்களுக்குள் அடங்கி விடும்.   இந்த இரு தினங்களும் நிழலற்ற தினம் என அழைக்கப்படுகின்றன.