சென்னை

ரும் திங்கள் அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

கொரோனா பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2.30 வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.

அவ்வகையில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் திறக்கப்படுகின்றன.

இனி இறைச்சிக்கடைகள் இனி மூடப்படும் என ஒரு செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி வரும் திங்கள் 06.04.2020 அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு வருடமும் அரசு அறிவிக்கும் விடுமுறை ஆகும்.

சமுதாய இடைவெளியை இறைச்சிக்கடைகள் பின்பற்றாவிடில் மட்டுமே கடைகள் உடனடியாக மூடப்படும் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.