பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் உயர்வு….மத்திய அரசு

டில்லி:

பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் கூறுகையில்,‘‘ பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ஓய்வூதியயாக ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாராலிம்பிக் வீரர்களின் ஓய்வூதியமும் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது’’என்றார்.