இந்தியர்கள் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன: ஆர் எஸ் எஸ்

கொச்சி:

இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக ஆர் எஸ் எஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொச்சியில் நேற்றுமுன் தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்,  அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதானந்த் சேபர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.  அமெரிக்காவில் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து அவரது கருத்தை கேட்டபோது,  இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை கண்டித்தார்.அமைப்புத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஊடகங்கள் அந்தச் சம்பவங்களை மிகைப்படுத்தி காட்டுவதாக குற்றஞ்சாட்டினார். ஊடகங்களின் குணம் அதுதான் என்றும் சதானந்த் சேபர் கூறினார்.

அதேநேரம் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் அனைவருமா தாக்கப்படுகின்றனர், யாரோ சிலர் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறினார். இந்தியர்கள் தாக்கப்பட்டதை அமெரிக்கர்களும் கண்டித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  வெளிநாடுகளில் தாக்கப்படும் இந்துக்களுக்கு சட்ட உதவிகள் உள்பட அனைத்து உதவிகளையும் தமது இந்து அமைப்பு செய்யும் என்றும் சதானந்த் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.