போயஸ் கார்டனில் பத்திரிக்கையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல் – பெரும் பதற்றம்

சென்னை

ன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அவர் கணவரும் போயஸ் கார்டன் சென்றனர்

அப்போது அவருடன் ஆங்கில தொலைக் காட்சி நிறுனவனத்தின் செய்தியாளர்களும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு அந்த செய்தியாளர்களை பாதுகாவலர்கள் உள்ளே விட மறுத்தனர்.

அது மட்டுமின்றி அவர்களை அந்த பாதுகாவலர்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

இதனால் செய்தியாளர் ஒருவருக்கு அவர் தலையில் அடி பட்டது.

அடி பட்ட செய்தியாளரை அவரது மைக்கை பிடுங்கி, மைக்கினாலேயே தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து மற்ற பத்திரிகையாளர்கள் அங்கே குவிந்தனர்.

அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்

போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் குதித்துள்ளதால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது

ஏராளமான போலீசார் போயஸ் கார்டனில் குவிக்கப் பட்டுள்ளனர்