மோடிக்கு எழுப்பப் பட்டுள்ள 15 கேள்விகள் : 1 மற்றும் 2

டில்லி

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் 15 கேள்விகள் எழுப்பி உள்ளன

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது உரை மற்றும் கட்டுரைகள் அடங்கிய 5 பாகங்கள் கொண்ட மாறிவரும் இந்தியா என்னும் புத்தகத்தை வெளியிட்டார்.   அப்போது அவர் தம்மை பாஜகவினர் வாய் திறவா பிரதமர் எனவும் விபத்தால் பிரதமர் ஆனவர் எனவும் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் மன்மோகன் சிங் தனது உரையில், “நான் ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் ப்யணம் சென்று வந்த பிறகும் பத்திரிகையாளர்களை சந்தித்து பயணத்தில் நடந்தவைகளை விவரிப்பேன்.  ஆனால் மோடி இந்த நான்கரை ஆண்டுகளில்  எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்தார் என கூற முடியுமா?” என வினவினார்.

இந்நிலையில் மோடிக்கு 15 கேள்விகளை எழுப்பு விரும்புவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.    மோடி குறிப்பிட்ட ஊடகங்களுக்கு மட்டும் தனிப்பட்ட பேட்டி அளித்து வருவதாகவும் அவர் அனைத்து செய்தியாளர்களையும் சந்தித்து இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா எனவும் அந்த ஊடகங்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.

அந்த 15 கேள்விகளில் முதல் இரு கேள்விகள் பின் வருமாறு :

1.       பாஜக சென்ற மக்களவை தேர்தலில் முந்தைய காங்கிரஸ் அரசு சுமார் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்காமல் மக்களை தவிக்க விட்டதாக கூறி வந்தது.   தற்போது நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு இதுவரை 14 லட்சம் வேலை வாய்ப்புக்கள் மட்டுமே பாஜக அரசு உருவாக்கியதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அத்துடன் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ஏராளமான வேலைவாய்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைசசர்கள் தெரிவிக்கின்றனர்.   ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் மிக குறைந்த தொகையே கடனாக  அளிக்கப்பட்டுள்ளதால் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி அவர்களே, நீங்கள் 2014 ஆம் வருடம் வாக்களித்த வேலைவாய்ப்புக்கள் எங்கே சென்றன.

 

2.       .கடந்த 2014 ஆம் வருடம் நீங்கள் அளித்த அடுத்த வாக்குறுதி விவசாய வருமான அதிகரிப்பு.   அப்போது நீங்கள் விவசாய வருமானம் 2022க்குள் இருமடங்காகும் என தெரிவித்தீர்கள்.    ஆனால் நான்காண்டுகள் கழிந்துள்ள நிலையில் அது 5% மட்டுமே அதிகரித்துள்ளது.   இந்த நிலையில் போனால் 14 ஆண்டுகள் ஆனாலும் அது இருமடங்கு ஆகாது.

அது மட்டுமின்றி பயிர்களுக்கான அதிக பட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க உங்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆகி உள்ளன.   அதுவும் தற்போது 50% மட்டுமே அதிகரித்துள்ளது.   ஆனால் நாட்டில் பல இடங்களில் விவசாயிகள் இந்த விலையில் பாதிக்கு தான் விவசாயப் பொருட்களை விற்க முடிகிறது.

தற்போதுள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அவர்களுக்கு வருமான உத்திரவாதம் மற்றும் எந்த உதவியையும் அரசு அளிக்காமல்  இருப்பது ஏன்

அடுத்த கேள்விகள் நாளை வெளி வரும்.

Thanx : The WIRE