மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 3 மற்றும் 4

டில்லி

டகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 3 மற்றும் 4

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு தனிப்பட்ட பேட்டியில் மட்டும் அவர் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதை ஒட்டி ஊடகக்கள் அவருக்கு 15 கேள்விகள் எழுப்பி இருந்தன.

அந்த வரிசையில் இன்று 3 மற்றும் 4 ஆம் கேள்விகள் இதோ :

3. பாஜக அரசு முந்தைய அரசு தவறான நிதிக் கொள்கையை அமுல் படுத்தியதாலும் அவசரமாக யோசிக்காமல் பல நடவடிக்கைகள் எடுத்ததாலும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வருகிறது. அதே நேரத்தில் பாஜக அரசு பல முன்னேற்ற கணக்குகள் தொடங்கியதாக கூறி வருகிறது. அத்துடன் பல மானிய திட்டங்களை பாஜக அரசு நிறுத்தியது. அத்துடன் பல பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறை இல்லாமல் செய்துள்ளதாக கூறி உள்ளது.

ஆனால் நிதிநிலை அறிக்கையில் இன்னும் பற்றாக்குறை உள்ளது எதனால் ? உங்களின் குறைந்த பட்ச நிதிக் கொள்கைகள் மூலம் ஏன் அதை சரி செய்ய முடியவில்லை?

4. கடந்த 2015 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உன்க்களுக்கு வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பி அளிக்காதவர்கள் பட்டியலை அளித்துள்ளார். அதன் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? அந்த பட்டியலையும் அதன் மீது உங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் பகிரங்கமாக அறிவிக்க நீங்களும் உங்கள் அரசும் தயங்குவது ஏன்? இந்த விவரங்களை அறிய ஒரு பாராளுமன்ற குழுவை அமைக்க விடுத்த கோரிக்கைக்கும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இது குறித்து அளிக்கப்பட பதிலுக்கும் தாங்கள் பதில் கூறவில்லை. அது ஏன்?

அடுத்த கேள்விகள் நாளை தொடரும்.