டில்லி:

பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலி மூலம், மக்களின் தனிப்பட்ட விபரங்களை திருடம் செயலை இந்திய ஊடகங்கள் மறைப்பதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலி யை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர் ரகசியங்கள் திருடப்படுவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டலடித்திருக்கிறார்.

தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், “ ஹாய்.., என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அதிகாரப்பூர்வ ’ஆப்’பில் உங்களை பதிவு செய்து கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்களின் கம்பெனிகளுக்கு தந்து விடுவேன்’ என ராகுல் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில், ஊடகங்களையும் சாடியுள்ளார்.

’மோடி ஆப்பின் மூலம் இந்தியர்களின் ரகசியங்கள் மூன்றாவது நபர்களுக்கு போய் சேருவது தொடர்பான செய்திகளை   இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு  செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செய்தியை எப்போதும் போல் புதைத்ததன் மூலம் மிகப்பெரிய காரியத்தை செய்து வரும் பிரதான ஊடகங்களுக்கு நன்றி’ என்றும் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.