லக்னோ,
மாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மகன் அகிலேஷை கட்சியை விட்டு நீக்கினார். இதன் காரணமாக கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதையடுத்து, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தந்தையையும், மகனையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமுகமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
இன்னும் ஒருசில மாதங்களில் உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் முலாயம் சிங் அறிவித்தார். இந்த பட்டியலில் அகிலேஷ் பரிந்துரை நபர்களின் பெயர் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை மூண்டது.
இதைதொடர்ந்து தனி கட்சி ஆரம்பிக்கும் நோக்கில் அகிலேஷ் தனது ஆதரவார்களுடன் ஆலோச னை நடத்தினார். தனி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்க முடிவு செய்தார்.
இதன் காரணமாக அவரை 6 வருடம் கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக முலாயம்சிங் அதிரடி யாக அறிவித்தார்.
இதனால் உ.பி. அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி தொண்டர்களிடையேயும் சலசலப்பு நிலவியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் கட்சியில் பிறகு ஏற்பட்டுவிடுமோ என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவலை கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக  கட்சியின் மூத்த நிர்வாகிகள்  சிலர் இருவருக்கும் இடையே சமரச முயற்சி செய்துவைக்க முயன்று வருகிறார்கள்.