நிலவேம்பின் மருத்துவப் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

நிலவேம்பு (Andrographis paniculata).

பயன்கள்

சாப்பிடுவதற்கு முன்பு நிலவேம்பு கஷாயத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டால் உமிழ்நீரும்(saliva), இரைப்பை நீரும்(gastric juice) ,  சுரந்து ஜீரணத்தை சரி செய்யும். பசியை தூண்டும், உப்பசத்தை குணமாக்கும்,  பித்த நீரை(bile secretion) சுரக்கச்செய்யும், கல்லீரலை (hepatoprotective ) பாதுகாக்கும், ,  இது ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உணவில் உள்ள நஞ்சுக்கள் மற்றும் வைரஸ் தொற்று கிருமிகளை கொல்லும், அதோடு மூளை காய்ச்சலுக்கு (encephalitis)  கொடுத்தால் நல்ல பலன் தெரியும், தாது உப்புகளை சரி செய்து சிறுநீரக செயல்பாட்டை ஒழுங்குப்படுதி சிறுநீரை நன்கு வெளியேற்றும், வயிற்றுப்புழு (anti-protozoan) வெ ளியேற்றுகிறது. மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கவும், இரத்த சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். இரத்த அழுத்தத்தினை சீராக வைக்கவும் நிலவேம்பு உதவுகிறது

காய்ச்சல்

ஆசியாவில் கடந்த சில நூற்றாண்டுகளாக காய்ச்சலுக்கு நிவவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. டெங்கு மற்றும் மலேரியா வைரஸ் சுரத்திற்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் குணப்படுத்துகிறது

உள்காயத்தை ஆற்றுவதற்கும், நோய் எதிர்ப்பாற்றல், வைரஸ்/பாக்டிரியா கிருமி நாசினியாகவும், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், உடல் உறவுக்கான சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தவும் நிலவேம்பு உதவுகிறது

வாதசுர நீரேற்ற மாற்றுஞ் சுரதோஷங்
காதமென வோடக் கடியுங்காண்-மாதரசே
பித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்குஞ்
சுத்தநில வேம்பின் றொழில்.
                                                         – சித்தர் பாடல்

சித்த மருத்துவத்தில் அனைத்து வகையான சுர வகைகளுக்கும் நிலவேம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது வலியுடன் கூடிய வாத சுரத்தைப்போக்கும்  மேகநீர்க்கோவை, சுரதோஷம்,  பித்த மயக்கம்  இவைகளை நீக்கும்.  உடல் சோர்வு, குணப்படுத்தி பித்த மயக்கத்தைப் போக்கும், புத்தி தெளிவை உண்டாக்கும்.

குடிக்கும் முறை

அரை லிட்டர் நீரில் 10 கிராம் நிலவேம்பு பொடியை ஒரு மணி நேரம் ஊர வைத்து பாதியாக சுண்டியபிறகு 50 மிலி வீதம் காலை மாலை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்

காய்ச்சல் இல்லாதவர்களும் உடல் சோர்வு இருந்தால் அருந்தலாம்

காயங்களுக்கு மஞ்சளுடன், 10 கிராம் நிலவேம்பு பொடியை சேர்த்து மேற்பூச்சா நல்ல காயங்கள் குணமாகும்.

க‌ர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படும்போது 10 இலையை 3 மிளகுடன் சேர்த்து   நன்றாக கொதிக்கவைத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

கால் கை எரிச்சல் ஏற்பட்டால் 25 கிராம் நிலவேம்புடன் 400 மிலி தண்ணீருடன் கலந்து 50 மி.லி ஆக சுண்டவைத்து குடித்து வந்தால் கைகால் எரிச்சல் குணமாகும்

தோலில் ஏற்படும் வெண் புள்ளி, அரிப்புக்குக்கு 2 கிராம் நிலவேம்பு இலைப்பொடியை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் மேலும் நிலவேம்பினை நல்லெண்யெ உடன் கலந்து மேல் பூச்சாக பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்

பார்வை
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4032030/

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002

கார்ட்டூன் கேலரி