பிஸ்தாவின் மருத்துவ பலன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

பிஸ்தாவின் ((Pistha) மருத்துவ பலன்கள்

100 கிராம் பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள்

http://nutrition.agrisakthi.com/detailspage/PISTACHIO%20NUT/19

அதிகமான புரதச்சத்து பிஸ்தாவில் உள்ளது. பிஸ்தாவில் அதிகமான ஆன்டாசிடெண்ட்ஸ் உள்ளது பொட்டசியம் போன்ற தாதுக்கள்  நிரம்பி உள்ளது பிஸ்தாவை எடுத்துக்கொள்ளும்போது இரைப்பையை பாதுகாத்து குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவை அதிகப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது, இதில் இருக்கும் விட்டமின் ஏ கண்பார்வைக்கு மிகவும் நல்லது

முறையான உணவுமுறையில் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடையை குறைத்து உடலை அழகூட்டுகிறது.

தேகபல முண்டாகும் தெம்புதர விந்திறுகும்
போகமதி லிச்சையுறப் போராடும் – வேகமுடன்
மங்கையர்க்குப் பால்சுரக்கும் மாதரசே பிஸ்தாவைக்
சங்கையறத் துய்த்தார்க்குச் சாற்று.

சித்தர் பாடல்

பிஸ்தா பருப்பை உண்பவர்களுக்கு தாது பலத்தையும், காம இச்சையும் கூட்டும், விந்தைப் பெருக்கும் , பிரசவத்திற்குப் பின் உள்ள பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும். இதை காம விருத்தினி என்றும் அழைப்பர்

உபயோகிக்கும் முறை

இந்தப்பருப்பை தூள் செய்து சிறிது நாட்டுச்சர்க்கரை (அ) பனங்கற்கண்டுடன் பாலில் கலந்து உண்டுவந்தால் தேக புஷ்டி உண்டாகும். ஆண்மை சக்தியை அதிகப்படுத்தும், இருதயம் மற்றும் இரைப்பையை பலப்படுத்தும், அளவுக்கு அதிகமாக உண்டால் தலைவலி கொடுக்கும்.

பிஸ்தாவை உண்ணும்போது தலைவலி ஏற்பட்டால் புளிப்பு பதார்த்தத்தை உண்டால் சரியாகும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Medical Benefits of Pista: Doctor Balaji Kanagasabai
-=-