சென்னை

ருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% சிறப்பு ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்குச் சமீபத்தில் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இன்று தமிழக சுகாதார அமைச்சர் வெளியிட்ட தர வரிசைப்பட்டியலில் அதற்கான தனி பட்டியல் இடம் பெற்றுள்ளது.   அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 313 மருத்துவ மாணவர்களும் 92 பல் மருத்துவ மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வரும் 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   இதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கினுள் மூடப்பட்ட கூடத்தில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் 500 பேருக்கு  அட்டுமே அனுமதி உண்டு.  அவர்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட உள்ளது.  மாணவர்களுடன் பெற்றோரில் ஒருவர் அல்லது ஒரு காப்பாளர் உடன் வர அனுமதி உண்டு.