Random image

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ரத்து

a

புதுடில்லி: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்வதற்கான  அவசரசட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் இன்று அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ மேற்படிப்பு ஆகியவற்றிற்கு ஒரே பொது நுழைவுதேர்வு நடத்த மத்திய அரசிற்கு கடந்த மார்ச் மாதம் 7 ம் தேதி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.    இந்த உத்தரவு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.   இதையடுத்து  மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர முடிவு எடுத்துள்ளது.  குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பின்னர் இது பிரகடனப்படுத்தப்படும்.

ஆகவே  மருத்து பொதுத்தேர்வு இருக்காது. பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையிலும்   கலந்தாய்வு அடிப்படையிலும்  மருத்துவ படிப்பிற்கான தேர்வு இருக்கும்.

2016 என்இஇடி நடத்தும் தேர்வு இல்லாமல் மாநில அரசு நடத்தும் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may have missed