சென்னை: மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி தமிழகத்தில் இன்னம் 4 நாட்களில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்து உள்ளார்.

மருத்துவப்படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வை மத்தியஅரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், தமிழக மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் தமிழகஅரசு, நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பளளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கிடு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த சட்டத்துக்கு மாநில கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்க தாமதித்து வருவதால், ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனால், கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் கடந்த அகில இந்திய ஒதுக்கீடுக்கான மருத்துவ கலந்தாய்வை மத்தியஅரசு நடத்தி முடித்து விட்டது. இதனால், மற்ற இடங்களுக்கு எப்போது மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என  கேள்வி எழுந்ததது. இதற்கிடையில் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க, ஆளுநர் தரப்பில் ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டதால், இந்த ஆண்டு உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு தாமதம் ஆவதால், சட்டத்தை அமல்படுத்தி,  உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக்டோபர் 29ந்தேதி) அதிரடியாக  வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.

இதையடுத்து மருத்துவ  கலந்தாய்வு தொடர்பான அரசின் முடிவில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு இளங்கலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி 4 நாட்களில் அறிவிக்கப்படும் என  கூறியுள்ளார். தற்போது, தமிழகஅரசு   எம்.பி.பி.எஸ் படிப்புக்கான  7.5% உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டதால் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.