மருத்துவக் கலந்தாய்வு: மூனே நாளில் நிரம்பிய பொதுப்பிரிவுக்கான இடங்கள்

சென்னை:

மிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், திங்கட்கிழமை முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

இன்று 3வது நாளாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் இடங்கள் நிறைவறைந்துள்ளன.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்து படிப்புகளுக்காக நடத்தப்படும் மருத்துவக் கலந்தாய்வு  ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு  மருத்துவமனையில் கடந்த 1ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முதல்நாள்  சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற  நிலையில், பொதுப்பிரி வினருக்கான கலந்தாய்வு  கடந்த 2ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் உள்ள  22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பொது பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளது.

இனிமேல்  கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பும், இடஒதுக்கீடு அல்லாத பிரிவினர் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களையோ அல்லது தனியார் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையோதான் தேர்வு செய்ய முடியும்.