சென்னை:

ருத்துவ கலந்தாய்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் மூலம் பங்கேற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக  மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்று தமிழக மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த மாணவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு கடைசி நேரத்தில், விலக்கு அளிக்க முடியாது என்று பல்டி அடித்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதி மன்ற உத்தரவுபடி தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வில் வெளி மாநிலத்தை மாணவர்கள் பலர் விதிகளை மீறி,   போலி இருப்பிட சான்றிதழ் மூலம் பங்கேற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதுக்கோட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில் கலந்துகொள்ள, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிப்பட்டிருந்தது. அதில், கேரளாவைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பதை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கண்டு பிடித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த மாணவர்களை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சம்மன் அனுப்பப்பட்டவர்களில், சுலைமான் என்ற மாணவர்தான் தமிழக அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவர்களின் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவர்களுக்குப் போலிச் சான்றிதழ் வழங்கிய வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.