பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: உச்சநீதி மன்றத்தில் மருத்துவ அவசர நிலை பிரகடனம்!

டெல்லி:

ச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் எனப்படு எச்1என்1 வைரஸ் தொற்று அவ்வப்போது தாக்குதல் நடத்தியது.. ஸ்வைன் இன்ப்ளூயன்ஸா (H1N1) எனப்படும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக பன்றிக்காய்ச்சல் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளத.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படு கிறது.

இது தொடர்பாக மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைநீதிபதி பாப்டேவிடம் முறையிட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை விடுத்தார்.   இதையடுத்து,  உச்சநீதி மன்றத்தில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.  இது தொடர்பான அவசரகால சூழ்நிலைகளை கவனித்துக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.