சென்னை

மிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர்.

நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.  இதுவரை தமிழகத்தில் 2323 பேர் பாதிக்கப்பட்டு அதில் 27 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இவர்களில் ஆண்கள் 1553 பேர் மற்றும் பெண்கள் 770 பேர் ஆவார்கள்,  இதுவரை 1258 பேர் குணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் கடும் அச்சம் கொண்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 138 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.   சென்னையில் மொத்த எண்ணிக்கை 906 ஆகி உள்ளது.

கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்,  அப்போது மருத்துவ நிபுணர்கள் கொரொனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பாதிக்கபடோர் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையை பொறுத்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.