மருத்துவ நிதி ரூ.2 லட்சமாக உயர்வு: பத்திரிகையாளர்களுக்கு சலுகை அறிவித்துள்ள எடப்பாடி…

சென்னை:

த்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இன்றைய விவாதத்தின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.

அப்போது,  பணிக்காலத்தில் பத்திகையாளர்கள் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் போது பத்திரிகையாளர் நல நிதியத்தால் வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி ரூ.50000 லிருந்து ரூ.1 லட்சமாக 1.8.2018 முதல் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்ட நிலையில் தற்போது இந்த நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்.