சென்னை

தமிழில் மருத்துவம் படிக்க வசதியாக மருத்துவக் கலைச் சொற்களை அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளத துணை வேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்

பல மருத்துவக் கலைச் சொற்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதனால் பெரும்பாலான சொற்கள் ஆங்கிலத்திலேயே பயன் படுத்த படுகின்றன. மருத்துவப் பாடம் தமிழிலும் படிக்க முடியும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல மருத்துவ சொற்களுக்கு தமிழில் பொருள் அல்லது சரியான சொற்கள் அறியப்படாமல் இருந்து வந்தது.

இதை ஒட்டி டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன், “பல ஆண்டுகளாக மருத்துவச் சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ் கலை அகாடமி, சென்னை பல்கலைக்கழகம் உளிட்ட அமைப்புக்கள் பணியில் ஈடுபட்டன. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் அமைப்பு தமிழில் அனைத்து துறை சொற்களையும் மொழி மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடது.

தற்போது இது குறித்து ஒரு அகராதி ஒன்று அமைக்கப்பட்டு அதில் கணினி அறிவியல், பவுதிகம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் வார்த்தைகள் சேர்க்கப்பட உள்ளன. இதில் மருத்துவத் துறைக்கான பணியில் எங்கள் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. பலரும் இது போன்ற தொழில் நுட்ப பெயர்களை தமிழில் மாற்றுவது அவசியமா என கேள்வி எழுப்புகின்றனர். தமிழ் மொழிக்கு என தனி பெருமை உள்ளது தானே? அனைத்து பாடங்களின் தேர்வையும் ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் தமிழில் எழுதும் போது ஏன் அதே வார்த்தையை  பயன்படுத்த வேண்டும்?

தற்போது இது தேவை இல்லை என நினைத்தாலும் அனைத்து மாணவர்களும் தமிழில் எழுதும் போது இந்த வார்த்தைகளுக்கு தேவை இருக்கும். தற்போது 200 மருத்துவச் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. உதராணத்துக்கு டிரை ஐஸ் என்பது உலந்த விழி, கார்டியாக் ஃபெய்லியர் என்பது இருதய செயலிழப்பு மற்றும் அனெஸ்தீசியா என்பது உணர்வகற்றி என்பது போன்ற எளியதாக மாற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.