மருத்துவர் ஜெயமோகனின் பெயரில் மருத்துவ சேவைகள் முன்னெடுக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்களாக தொடங்கப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மருத்துவர் ஜெயமோகனின் மரணம் எனக்கு மிகுந்த சோகத்தையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் வாழும் மக்களுக்காக ஆத்மார்த்தமாக பணியாற்றிய அவரது மனிதநேயத்துக்கு நான் தலைவணங்குகிறேன். இதையும் இதோடு மற்ற சேவைகளையும் செய்ய விரும்புகிற மருத்துவர்களின் உதவியோடு அந்த கிராமத்தில் ஜெயமோகனின் பெயரால் எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளுக்கான முன்னெடுப்பை மேற்கொள்கிறேன். அவரது ஆன்மாவுக்கு நான் செய்யும் மரியாதை இது”

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

.