தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியானது

சென்னை:

மிழகத்தில்  எம்.பி.பி.எஸ் மருத்த்வ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில்  தர வரிசை வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற கீர்த்தனா முதலிடத்தில் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜூலை 1 முதல் 10 வரை மருத்துவ படிப்பிற்கான  முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்பட்டியலில்  மருத்துவ படிப்புக்கு 3ஆம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பமும் ஏற்கப்பட்டுள்ள தாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தேர்வு போக மீதம் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு  நடைபெற உள்ளது. 2,593 காலி இடங்கள்  மட்டுமே உள்ள நிலையில், 43,935 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த  நிலையில்  மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.