கண்டங்கத்திரி

பெரிய சுண்டை, கசங்கி, கண்டங்கத்தரி, Yellow-berried Nightshade என பல பெயர்களில் விளங்கி வருகிறது

(Solanum Jacquinii).
காசசுவாசங் கதித்தஷய மந்த மனல்
வீசுசுரஞ் சந்நி விளைதோஷ-மாசுறுங்கா
லித்தரையு ணிற்கா வெரிகாரஞ் சேர்கண்டங்
கத்தரியுண் டாமாகிற் காண்
—சித்தர் பாடல்

கண்டங்கத்திரியின்  வேர், இலை, பூ, காய், பழம் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.  இந்தச்செடியானது பார்வைக்கு கத்தரி செடியைப்போல கொத்தாக வளர்ந்திருக்கும்.  இலைகளின், காம்புகளில் முட்கள் நிறைந்து இருக்கும். இதன் பூ நீலவண்ணமாகவும், காய் பச்சை நிறத்துடனும் காணப்படும்.

தீரும் நோய்கள்

ஈலை சுவாச நோய், சுவாசக்காசம்(டிபி), அக்கினிமந்தம், தீரா சுரம், தொண்டையில் ஏற்படும் புண், முகவாதம்(bell’s palsy), நீரேற்றம், பீனிசம்(sinusitis), பல் வலி  போன்றவை தீரும்.

உபயோக்கிக்கும் முறை

இதன் இலையை நெருப்பில் வாட்டி இடித்து தூள் செய்து அரைத்தேன்கரண்டி காலை மாலை தேனில் குழப்பி சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, சுரம், சுவாசக்காசம் , கபம்(சளி) எளிதில் கரையும்.

இந்த இலையை சாற்றுடன் நல்லெண்ணைய் கூட்டி காய்ச்சி வடித்து மேற்பூச்சாக பூசினால் தலைவலி, கீழ்வாதம், அக்குள்நாற்றம் போன்றவை தீரும்.

இதன் பூவை நல்லெண்ணையுடன் காய்ச்சி வடித்து மூலத்திற்கு பூசி வர மூலம் தீரும். கால் வெடிப்புகளில் பூசி வர விரைவில் குணமாகும்.

கண்டங்கத்திரி வேர் , ஆடாதோடா வேர், திப்பிலி, ஓமம், சிற்றரத்தை ஆகியவையை அரைத்தேக்கரண்டி அல்லது 5 கிராம் அளவு  சுண்டக்காய்ச்சி காலை, மாலை 200 மிலி தண்ணீரில் அருந்திவந்தால் கபம்,சுரம்,சுவாச நோய்கள் நீங்கும்.

குறிப்பு : சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது சிறந்தது

கண்டங்கத்திரி காயை பொறியல் செய்து சாப்பிட்டு வர கபம்,சீதம் தீரும், பசி உண்டாகும், பீனிசம் போன்ற சைனஸ் நோய் தீரும்

கண்டங்கத்திரி பழத்தினை ஒரு மண் பாண்டத்தில் இட்டு வேக வைத்து குழம்பு பதம்போல் ஆக்கி நல்லெண்ணேய் கூட்டி மெழுகு போல் செய்து அந்த தைலத்தினை  செய்து வெண்குஷ்டத்திற்க்கு சிறிது நாட்கள் தடவி வர தோளின் நிறம் கிடைக்கும்

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002