வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் 

வெட்டிவேர் ஒரு மீட்டர் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இதில்  பச்சை, ஊதா நிறம் கலந்த பூக்களை உடையது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பண்டையக்காலத்தில் இருந்து இன்று வரை மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு அதிகமாக பயன்பாட்டில் இருந்தது வருகிறது. அதன் மருத்துவப்பயன்பாட்டைப் பற்றி பார்ப்போம்

வெட்டிவேரின் தாவரவியல் பெயர்கள்

Aceite de Citronela, Andropogon nardus, Ceylon Citronella, Citronnelle de Ceylan, Citronnelle de l’Inde, Citronnelle de Java, Cymbopogon afronardus, Cymbopogon nardus, Cymbopogon validus, Cymbopogon winterianus, Herbe Citron, Huile de Citronnelle, Java Citronella, Jonc Odorant, Verveine des Indes.

மருத்துவப்பயன்கள்

Citronella oil owes its antibacterial and antiseptic nature to compounds like methyl isoeugenol.

வெட்டிவேரில் உள்ள மெத்தெய் ஐசோயூனால் என்ற வேதிப்பொருள் ஆன்டி பாக்டியா( antibacterial )  மற்றும் ஆன்டிசெப்டிக்antiseptic  ஆகவும் செயல்படுகிறது. இதனால்  புண்களில் ஏற்படும் கிருமிகளை தடுக்கவும் , பூஞ்சை போன்ற நுண்ணியிரிகளை கொல்லவும் வயிற்றுப்பகுதியில் உள்ள பெருங்குடல், சிறுகுடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகப்பாதை, சிறுநீரக, பிராஸ்டேட் சுரப்பி போன்றஇடங்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கிறது

வெட்டிவேரில் எண்ணெய் ஆனது நறுமணம்(aromatherapy) கொண்டதாக இருப்பதால் மனது இதமளிப்பதாகவும், மன அமைதி கொடுப்பதற்கும் உதவுகிறது. மனதில் ஏற்படும் படபடப்பு(anxiety) போக்கி மனது இதமாக்குகிறது.

இந்த எண்ணெய் கல்லிரல், இரைப்பை, உணவுப்பாதை உள்ள விக்கங்களையும் குணப்படுத்துகிறது. இந்த எண்ணெயை உடலின் மேல் தேய்த்து குளிப்பதன் மூலம் சதை இருக்கம் மற்றும் உடல் வலியை நீக்குகிறது.

பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலியை போக்குகிறது.

தோல்

இதை களிம்பாகவும், சோப்பாகவும் பயன்படுத்துவதன் மூலம் தோல் வறட்சி மற்றும் முகப்பரு ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.

பிற பயன்கள்

வெட்டிவேரின் புகையை போடுவதால் கொசுக்கள் அண்டாது. வெட்டிவேர் ஊதுபத்தி நம்ம மன அமைதியை கொடுக்கும்.

விவசாயிகளுக்கு உரமாகவும், மண்ணரிப்பை தடுக்கவும் பெரிய அளவில் பயன்படுகிறது.

ஆன்மீகம்

வெட்டிவேரை சிவனுக்கு விநாயகருக்கு, சித்த குருமார்களுக்கு மாலையாக செய்து வணங்குவது வழக்கம்.

சித்த மருத்துவம்

இதுவே குருவேர் விருத்தம்
பித்தவிதாகஞ் சசிகாமிலங் கரைப்பித்த
மனம்
தத்திடுகுட்டஞ் சிரநோய் களமடி தாதுநட்ட
மத்தமனற்புண் டடைப்புண் வண்மூர்ச்சை
வரிவிழிநோய்
வித்திரமேகத்தின் கட்டியும்போம் வெட்டி
வேரினுக்கே
— சித்தர் பாடல்

பயன்கள்

வெட்டிவேறுக்குப் பித்தத்தால் அகாலத்தி னுண்டாகிற தாகம், சோமரோக காமாலை சத்திபித்தம், சுரம் பரவுகின்றகுஷ்டம் ,தலைநோய், கழுத்து நோய், சுக்கில நஷ்டம், உன்மத்தம் தீப்புண் ,முலைச்சிலந்தி, திரிதோஷ,மூர்ச்சை நேத்திரரோகம், வித்திருக்கட்டி யிவை நீங்கும்.

ஆண்மை பெருகும், பித்த நோய் குணமடையும், மூத்திர எரிச்சல் குறையும், தலை நோய் குணமடையும், தீப்புண்ணுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் உபயோகிக்கும் முறை

ஒரு கைப்பிடி வெட்டிவேரை அரை லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கால் லிட்டர் ஆகும்வரை காய்ச்சி சிறிது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்ந்து பருகலாம்.

இதை சர்பத் ஆகவும் செய்து பால், தயிர், மோர் இவைகளில்  கலந்து பருகுவதால் உடலுக்கு குளிர்ச்சியும் உற்சாகத்தையும் கொடுக்கும்.

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(yoga)
அரசு மருத்துவர்

99429 22002
கிருஷ்ணகிரி மாவட்டம்