வெந்நீர் மருத்துவம்

இளஞ்சூடான நீர்(கொதிக்க வைத்து திட்டமாய் ஆற்றியது).
அளவோடு குடிக்கும் வெந்நீரால் உடலில் பல்வேறு நோய்கள் நீங்கி ஆரோக்கியமாய் வாழலாம்,

வகைகள்
காய்ச்சி ஆறிய வெந்நீர்
காய்ச்சி அறிய வெந்நீரைக் குடித்தால் உமிழ்நீர் சுரப்பியில் ஏற்படும் வீக்கும் குறையும், மூச்சுத்தொந்தரவு, வாந்தி, மயக்கம், கண்வலி , செவிக்குத்தல், கோழை, கபம், மூச்சி எடுத்தல் திரிதோசமும் நீங்கும்.

கால்பாகம், அரைபாகம் சுண்டி வெந்நீர் என்பது நீரை சுண்ட வைப்பதாகும்

கால்பாகம், அரைபாகம் சுண்டிய வெந்நீர்
கால்பாகம், அரைபாகம் சுண்டிய வெந்நீரை பருகினால் பித்த கோவம் நீங்கும்.

அரை பாகம் சுண்டிய வெந்நீர்
அரை பாகம் சுண்டிய வெந்நீர் வெந்நீரை அருந்தி வந்தால் திரிசோசமும் நீங்கும்

முக்கால் பாகம் சுண்டிய வெந்நீர்
முக்கால் பாகம் சுண்டிய வெந்நீர் அருந்தி வந்தால் வாந்தி, குளிர்நடுக்கம் போன்றவை நீங்கும்.

உணவுக்கு முன் அருந்தும் வெந்நீர்  பசி குறையும், உணவு உண்டபின் சிறிது கழித்து வெந்நீர் அருந்துவதால் உடலில் நோய் அண்டாது

உலோகங்களின் மூலம் பயன்படும் வெந்நீர்
உலோகங்களில் வைத்து வெந்நீர் குடிக்கும் பழக்கம் நம் பண்பாட்டில் இருந்துவருகிறது. அவற்றில் சில உடல் ஆரோக்கியமும் கொடுக்கிறது

பொற்கெண்டி வெந்நீர்
வெந்நீரை பொற்கெண்டியில் அருந்தினால் சரீச உஷ்ணம், கப ரோகம், வாத நோய், சுரம் நீங்கும், மேலும் சுக்கிலம், நல்லறிவு , ஸ்பரிஷ்ய ஞானம் உண்டாகும்

வெள்ளி கெண்டி வெந்நீர்
வெந்நீரை  வெள்ளி கெண்டியில் அருந்திவந்தால் உஷ்ணம், தாகம் , குண்மம், பித்தம் இவைகள் விலகும், தேகத்திற்கு வலிமை உண்டாகும்
நீரை எட்டில் ஒரு பங்கு சுண்டிகுடித்தால் வெகு சிறப்பு

தாமிரக் கிண்ணம்
தாமிரக் கிண்ணம் வெந்நீர் அருந்தினால் கண் புகைச்சல் , இரத்த பித்தம், கப நோய் நீங்கும்,

இரும்புக் கிண்ணம்
இரும்புக்கிண்ணத்தில் நீர் அருந்தினால்  தாது விருத்தி அடையும், நரம்புகளுக்கு உறுதி, உடல்நிலையை சமநிலை பெறும்

– மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர், கல்லாவி
99429 22002