வீட்டில் இருக்கும் எலுமிச்சையை எப்படி மருந்தாக மாற்றலாம் என்பதைப்  பார்க்கலாம்.

லுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண்குணமாகும்.

இந்த   சாறு பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்ஆற்றல் கொண்டது.  இதில்பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உணவுவில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

வைட்டமின் `சி இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால்,உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கபடுகின்றன.

தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் அளிக்கும்.

சிலருக்கு பயணத்தின் போது வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

எலுமிச்சை சாற்றை தினமும் எடுத்துக் கொண்டால்,  அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக

வெளியேற்றிவிடும்.

எனவே, வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் சிறந்தது.

தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், புற்றுநோய் நம்மை அண்டாது.

உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்கும் சக்தி இதற்கு உண்டு.

வயிற்றில் இருக்கும்  நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை கலந்து குடித்தால் செரிமான பிரச்னை தீரும்.

எலுமிச்சை சாற்றில், சிரிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால்,பற்களில் இருக்கும் கறைகள்,

பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரசனைகள் தீர்ந்து, பற்கள்ஆரோக்கியமாக இருக்க உதவும்.

 

உடலில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால்,காயங்கள் எளிதில் குணமாகும்.

 சரும பராமரிப்பில் எலுமிச்சையின் பங்கு அதிகம். 

எலுமிச்சையை தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சேர்த்து வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட்  நிறைந்துள்ளது. எலுமிச்சையில் அதிகமான மருத்துவகுணங்கள் இருப்பதால் அதனை தினமும் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியம் காக்கப்படும்.