மீடு பாலியல் புகார்: வைரமுத்து உள்ளிட்டோர் பதில் சொல்ல வேண்டும்: கமல்ஹாசன் அதிரடி

“மீ டூ விவகராத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும்” என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து, ராதாரவி, கர்நாடக இசைவல்லுநர்கள் டி.என்.சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் மீது பலரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், “வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் திரையுலகினர் மவுனம் சாதிக்கின்றனரே” என்று கேட்டனர்.

அதற்கு அவர், “குற்றம்சாட்டப்ட்வர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.  எல்லரும் கருத்து சொல்லிவந்தால் தவறாக இருக்கும. அது நியாயமும் கிடையாது.

மீ டூ மூவ்மெண்ட் இயக்கத்தினர்,  நியாயமான முறையில் புகார் சொன்னால் கெடுதல் ஏதும் இல்லை. பெண்ணுக்கு ஏற்பட்ட தீங்கு குறித்து கண்ணகி காலத்தில் இருந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்று கமல் பதில் அளித்தார்.