மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்…..ஓபிஎஸ்

சென்னை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடந்த இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார்.

 

அப்போது அவர் கூறுகையில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அகற்றப்படும்.

கோவிலைகுளிரூட்டும் பணி நடக்கிறது. அந்த பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.