பாரதிராஜா இயக்கி நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நிர்மல் குமார் இயக்கத்தில் ஓம் என்ற புதிய படம் உருவாக இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்துக்கு கவிஞர் வைரமுத்து, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல் எழுத என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

படத்தில் பாரதிராஜாவுடன் ஜோ மல்லூரி, மவுனிகா, நக்‌ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து ‘ஓம்’ என்றிருந்த படத்தின் டைட்டிலை மீண்டும் ஒரு மரியாதை என மாற்றினார் பாரதிராஜா. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில் இத்திரைப்படம் வரும் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.