‘சித்தி 2’ சீரியலின் வில்லியாக மீரா கிருஷ்ணா….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.

பல சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி இரண்டாம் பாகம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது நடிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நடிகர் நடிகைகள் மாற்றப்போவதாக ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டிருக்கும் சித்தி 2 தொடரின் குழுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்வண்ணன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிழல்கள் ரவி இடம்பெற்றுள்ளார்.அதேபோல் ஷில்பாவுக்குப் பதிலாக ஜெயலட்சுமி நடித்து வந்தார்கள்.

‘சித்தி 2’ சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீஷா. தற்போது அவருக்குப் பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.