https://twitter.com/meera_mitun/status/1181857538356199424

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த இவர், ஜோ மைக்கிலை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து தான் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சன் பிக்ஸர்ஸ், பாண்டி ராஜ், சிவகார்த்திகேயன் தான் என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் மீரா மிதுன்.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன், நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.