நடிகை மீரா மிதுன் உருவ பொம்மை எரிப்பு..

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங் களில் நடித்த மீரா மிதுன் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்று பிரபலம் ஆனார். ஆனால் சமீபகாலமாக பிரபலங்களை பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறி விவ காரங்களில் சிக்கி வருகிறார்.
நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறினார். அதற்கு அறிந்து இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். சில ஊர்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந் நிலையில் அவரது உருவ பொம்மை எரித்து கலாம் இயக்கத்தினர் போராட் டம் நடத்தியுள்ளனர்.


விஜய் மற்றும் சூர்யா குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்த மீரா மிதுனை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலை யத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பிறகும் மீரா மிதுன் கேலி செய்து பேசியாதால், அவரது உருவ பொம்மை களை எரித்து புதுச்சேரி கலாம் இயக்கத் தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may have missed