திமுகவில் சேர்ந்து விட்டாரா மீரா மிதுன்…..?

பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்ற பலருக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்தது ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் ரசிகர்கள் பட்டாளத்தை விட ஹேட்டர்ஸ் பட்டாளம் தான் அதிகமாக இருக்கிறது.

இதனால் வெறுப்படைந்த மீரா மிதுன் ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் அடிக்கடி சொல்லி வந்தார் .ஆனால் இதுவும் பப்ளிசிட்டிக்காக செய்து வருவதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்த மீரா மிதுன் திடீரென்று அனைவரும் ஷாக்காகும் அளவுக்கு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .

நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நாம் ஒன்றாக ஒரு புது சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒன்றாக ஜெயிப்போம்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் சேர்த்து திமுக தலைவர் ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார்.