முதல்வர் வீட்டு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தால் அதை இந்நேரம் மீட்டிருப்பார் : மீரா மிதுன்

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 66 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

இது தொடர்பாக பிக் பாஸ் 3 பிரபலம் மீரா மிதுன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.நம் முதல் அமைச்சர் இந்த விஷயத்தில் ஏன் இன்னும் டைரக்டா இறங்கி அந்த கருவியை எங்கிருந்தாவது அவுட்சோர்ஸ் பண்ணி இன்னும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியலை இதுவே அந்த முதல் அமைச்சரின் வீட்டிலேயோ, அவரின் உறவினர்களோ அல்லது அவருடைய குழந்தையாகவோ இருந்திருந்தால் இந்நேரம் அவர் அந்த கருவியை எங்கிருந்தாவது அவுட்சோர்ஸ் பண்ணியிருக்கலாம். அந்த குழந்தையை மீட்டிருப்பார்னு எனக்கு தோன்றுகிறது.என கூறியுள்ளார் .

கார்ட்டூன் கேலரி