ஜெயலிதாவாக கங்கனா நடிப்பது அவமானம்.. நடிகை மீரா மிதுன் தாக்கு..

மாடல் அழகியாக இருந்து நடிக்க வந்தார் மீராமிதுன். 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏற்ப் புத்தி மாறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானதுடன் சிக்கினார்.


இவர் நடிகை கங்கனா ரனாவத்தை தாக்கி உள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சர்ச்சையில் வாரிசு நடிகர், நடிகைகள் தந்த அவமானங்களால் சுஷாந்த தற்கொலை செய்துகொண்டதாக கூறினார் கங்கனா.
’இந்த விஷயம்பற்றி அவர் உயிரோடு இருந்தபோது கங்கனா சொல்லாதது ஏன்? அவர் இறந்தபிறகு பப்ளிசிட்டிக்காக இப்போது பேசுகிறார். இவர் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு தகுதியே இல்லாதவர். எதையும் தைரியமாக எதிர்த்து குரல் கொடுப்பவர் ஜெயலலிதா. அந்த தைரியம் கங்கனாவுக்குகிடையாது என்கிறபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடிப்பது அவமானம்’என குறிப்பிட்டிருக்கிறார் மீரா மிதுன்.
கங்கனாரனாவத் ஜெயலலிதா வாழ்க்கை படமான ’தலைவி’ என்ற  படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

 

கார்ட்டூன் கேலரி