3வயது குழந்தையின் வாயில் ‘வெடி வைத்து வெடித்த’ இளைஞர்! உ.பி.யில் கொடுமை

--

மீரட்:

.பி. மாநிலத்தின் மீரட் பகுதியில் 3வயது பச்சிளங்குழந்தையின் வாயில் வெடியை சொருகி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெடி கொளுத்தி உள்ளார். வெடி வெடித்ததில் அந்த குழந்தை பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உ.பி. மாநிலம் மீரட் அருகே உள்ள  உள்ள மிலக் கிராமத்தில் உள்ள தராலா சாலையில் தீபாவளியையொட்டி வெடி வெடித்து அந்த பகுதி மக்கள் கொண்டாடினார்.

சம்பவத்தன்று, அந்த பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் 3வயது மகள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஹர்பால் என்ற இளைஞன் குழந்தையின் வாயில் வெடியை சொருகி வெடித்துள்ளான்.

இதன் காரணமாக அந்த குழந்தையின் வாய் மற்றும் தொண்டை பகுதி சேதமடைந்து  கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குந்தையின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு  50 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும்., உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

குழுந்தையின் வாயில் வெடிகை சொருகி கொளுத்தியது ஏன்… வேண்டுமென்றே செய்தாரா, விளையாட்டுக்காக செய்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.