புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,  நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது என்றும், தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர்கள், ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.