அஜீத் பட ரீமேக்கில் நடிக்கும் சூப்பர் ஹீரோ,,

தெறிக்கவிடலாமா என்ற வசனத்துடன் அஜீத்குமார் தெறிக்கவிட்ட படம் வேதாளம். 2015ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்துவெற்றி பெற்றது, விஸ்வாசம், வீரம் படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கினார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்க அஜீத்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்தார். அனிரூத் இசை அமைத்திருந்தார்.


வேதாளம் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மலையாளத்தில் உருவான ‘லூசிபர்’ அங்கு வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். அதற்கான பணிகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். இப்படத்தையடுத்துத்தான் அஜீத்தின் ’வேதாளம்’ ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது. அஜீத் நடித்த ’பில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார்.