பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்தா கவுடா உள்பட 4  பேரும், தீவிரம் காட்டி வருகின்றனர். மாநில அரசு, அணை கட்டும் நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி கூறி வருகின்றனர்.

இதையடுத்து, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.

சதானந்தா கவுடா

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த கடந்த 30-ந் தேதி 2-வது தடவையாக  பதவி ஏற்றது. மோடி அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 பேருக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதில், முக்கியமான,  சதானந்தகவுடாக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅமைச்சராக பதவி ஏற்ற சதானந்தா கவுடா முதன்முறையாக சொந்த மாநிலத்துக்கு வருகை தந்தார். அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்த நிலையில், பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில அரசுடன் இணைந்து அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

மேகதாது அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர‌ மோடி தலைமையில் பாஜக அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள   4 அமைச்சர்கள் மூலம்  மத்திய அமைச்சரவையில் மேகதாது திட்டத்துக்கு அனுமதி பெற கர்நாடகா திட்டமிட்டுள்ளது.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள‌ சதானந்த கவுடா, “மேகதாது  அணை கட்டுவதற்கான அனுமதி விரைவில் பெற்று தரப்படும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை பெற்றுத்தரவும், சட்டப்போராட்டம் நடத்தவும் நான் தயாராக இருப்ப தாகவும், இந்த விவகாரத்தில்,  கர்நாடகாவை சேர்ந்த 4 மத்திய அமைச்சர்களும், 25 பாஜக எம்பிக்களும் ஒற்றுமையாக செயல்படுவோம். கர்நாடகா பாஜகவை ஆதரிப்பதால், மத்திய அரசும் கர்நாடகாவை ஆதரிக்கும்”என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய க‌ர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், “சதானந்த கவுடா உள்ப பாஜக அமைச்சர்களின்  ஆதரவு எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அதேவேளையில் தமிழக அரசு மேகதாது  திட்ட‌த்தை எதிர்க்கக் கூடாது. இந்த திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கே அதிக நன்மைகள் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.