மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

வ்னி, மேகாலயா

மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அதில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார்.

மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்னி மற்றும் கிழக்கு மாசி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

அப்பகுதியில் திடீர் என நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் வீடுகள் மீது மண் சரிந்தது.

இதில் சிக்கி பெண் கிரிக்கெட் வீராங்கனை ரசியா அகமது உயிர் இழந்துள்ளார்.

தற்போது 30 வயதாகும் ரசியா அகமது பல தேசிய போட்டிகளில் மேகாலயாவுக்காக விளையாடி உள்ளார்.

இவர் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் இருந்து மேகாலயா மாநிலத்துக்காக விளையாடி உள்ளார்.

அவரது உடல் சரிவில் இருந்து மீட்கப்பட்டது.

இந்த சரிவில் சிக்கிய ஐந்து பேரைத் தேடும் பணி தொடங்கி வருகிறது.

ரசியா அகமது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.