அதிமுக எம்.பி.க்கள் அமளி: பாராளுமன்றம் 2வது நாளாக ஒத்திவைப்பு
டில்லி:
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் நேற்று முதல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இரு அவைகளும் 2வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் ஏற்படுத்திய கடும் அமளியால் பாராளுமன்றம் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில், மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 3வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேல்சபை அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவையிலும், அதிமுக எம்.பி.க்கள் மேகதாது அணை, கஜா புயல் தொடர்பாக அமளி செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் குரல் கொடுக்கின்றனர்.
மேலும், ரபேல் போர் விமானம், ரிசர்வ் வங்கிவிவகாரம் குறித்து விசாரிக்க கோரி எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக மக்களவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.