Random image

‘மேகதாது அணை:’ கர்நாடக பட்ஜெட்டில் மீண்டும் சர்ச்சை அறிவிப்பு

பெங்களூரு:

ர்நாடகாவில்  2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாநில முதல்வர் குமாரசாமியால் இன்று கர்நாடக சட்டமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.

இதில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.   பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசும் மீண்டும் அறிவித்து உள்ளது தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் உரையை வாசிக்கும் முதல்வர் குமாரசாமி

கர்நாடக மாநில 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று மாநில முதல்வர் குமாரசாமியால் கர்நாடக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள குமாரசாமி, தமிழகத்துக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்

மத்திய அரசின் அனுமதி பெற்று,பெங்களூரு நரக மக்களின் தேவைக்காக காவிரி நதியின் இடையே மேகதாது பகுதியில்  அணை கட்டப்படும் என பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமயா, மேகதாது பகுதியில் அணை கட்ட 5,912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.  குடிநீர், நீர்பாசனம், மின்சார உற்பத்திக்காக 5,912 கோடி ரூபாய் செலவில் 66.5 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்க மேகதாது அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அமைச்சரவை ஒப்புதலும் கொடுத்தது.

ஆனால், தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி காரணமாக, மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு தடை விதித்திருந்தது. காவிரி வரும் வழியான  மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழகத்தில் தற்போது வறண்டு  பாலைவனமாகி விடும் என்றும், எதிர்காலத்தில் டெல்டா மாவட்டங்கள்  சுடுகாடாகி விடும் என்று   எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணாக கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சி அப்போது  மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது குமாரசாமி, மீண்டும் மேகதாதுவில்  அணை கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து தமிழகம் கர்நாடகம் இடையே மீண்டும்  சர்ச்சையை கிளப்பி உள்ளார்.