மேகதாது விவகாரம்: கர்நாடகாவிலும் இன்று ஆலோசனை கூட்டம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. .5,912 கோடியில் இந்த அணை கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. தலை வழங்கியுள்ளது.  தற்போது கர்நாடக அரசு அணை கட்டுமானம் குறித்த, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை துவங்கியிருக்கிறது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு  எதிராக  உச்சநீதிமன்ற்தில் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.

மேலும், மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று(டிச.,6) கூட இருக்கிறது.

இந்நிலையில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடகாவில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெறுகறது.   இக்கூட்டத்தில்  நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.   மேகதாது அணை  விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை எதிர்கொள்வது குறித்தும்,  திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடக்கும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தலைமையில் ஒரு குழு, நாளை(டிச.,7) மேகதாதுவுக்கு சென்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய இருப்பது  குறிப்பிடத்தக்கது.

#megathathu #issue #consultation #meeting i#karnataka