ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மது பானங்களை வீட்டுக்கே டெலிவரியை அனுமதிக்கிறது மேகாலயா அரசு…  

மேகாலாயா:

கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மேகாலயா அரசு, மக்களின் ஆரோகியத்தை கருத்தில் கொண்டு, மது பானங்களை வீட்ட்டிலேயே டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே மது பானங்கள் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் மேகாலயா அரசு அறிவித்துள்ளது.

ரெஜிஸ்ட்ரேஷன், வரிவிதிப்பு மற்றும் முத்திரைத் தாள் துறை ஆணையர் மற்றும் துணை செயலாளர் சியெம்லீஹ் எழுதிய ஒரு கடிதத்தில் மாநில அரசு “பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் வழங்கப்பட்ட மருத்துவ பரிந்துரையை ஏற்று கண்டிப்பாக ஆரோக்கிய அடிப்படையில் மதுபானம் வீட்டிற்கு வழங்க வேண்டும்” என்றார்.

இந்த ஹோம் டெலிவரி வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை மட்டுமே அதாவது கோரொனா வைரஸ் எதிரொலி காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள வரை மட்டுமே டெலிவரி செய்யப்படும். இதுவரை மேகாலயா மாநிலத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக இந்த அறிக்கையும் வரவில்லை என்றார்.

இந்த திட்டத்தின் படி, மாநிலத்தில் வசிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் மருத்துவரின் மருந்து சீட்டை ஆன்லைனில் அப்லோடு  செய்து, மது பானங்களை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மதுபான கடையில் இருந்து மது பானங்கள் டெலிவரி செய்யப்படும். இந்த டெலிவரி 15 கிலோ மீட்டருக்கு உள்ளே இருந்தால் அதற்கு 100 ரூபாய் சேவை கட்டனமாகவும், இதுவே 15 கிலோ மீட்டருக்கு அதிகமாக இருந்தால் 200 ரூபாயும் சேவை கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்த டெலிவரி குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்று மேலே வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதற்கு முன்பு கேரளா முதலமைச்சர் பி விஜயன், இதே போன்ற ஆர்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆர்டரிலும் அங்கீகாரம் செய்யப்பட்ட மருந்து சீட்டை கொடுத்தால் மட்டுமே மது பானங்களை டெலிவரி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பு, 144 தடையால் மது பானம் கிடைக்காத காரணத்தால் 7 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தியை அடுத்தே வெளியிடப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி