உடைந்த பானை ஒட்டுமா? நொந்துபோன முதல்வர்..

மணிப்பூர் மாநிலத்தில் நாங்தொம்பான் பிரேன் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பிரேன் அரசுக்கான ஆதரவை 3 பா.ஜ.க.வினர்  உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் விலக்கி கொண்டு விட்டனர்.

 அவர்கள் காங்கிரசை ஆதரிக்கும் முடிவில் உள்ளனர்.

இதனிடையே அரசுக்கான  ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், மேகாலயா முதல்-அமைச்சர் கன்ராட் சங்மா.

அண்டை மாநிலத்தில் சங்மாவுக்கு ஏன் இந்த வேலை என்கிறீர்களா?

தேசிய மக்கள் கட்சியின் அகில இந்தியத் தலைவரே இந்த சங்மா தான்.

பா.ஜ.க.அரசுக்கு ஆதரவை விலக்கிக்கொண்ட நான்கு பேரும், தங்கள் தலைவர் சங்மா சொன்னதால், மூன்று தினங்களுக்கு முன்பு மணிப்பூரில் நடந்த எம்.பி.தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டளித்திருந்தனர்.

எனவே அவர்களைச் சமரசம் செய்யும் விதமாகத் தனி விமானத்தில் நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் பறந்த சங்மா, தனது எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

மணிப்பூர் முதல்வருடன் ஒத்துப்போக நான்கு எம்.எல்.ஏ.க்களும் விரும்பவில்லை.

இதனால் முதல்வர் சங்மாவின் பயணம் தோல்வியில் முடிந்து விட்டதாகத் தெரிகிறது.

உடைந்த கூட்டணியை ஒட்ட வைக்கும் முயற்சிகள் பலன் அளிக்காததால் சங்மா ஊர் திரும்பி விட்டார்.

– பா. பாரதி