ஷில்லாங்:

டகிழக்கு மாநிலங்களான  நாகலாந்து, மேகலாயா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே திரிபுராவில் கடந்த 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில,மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5மணி வரை நடைபெற உள்ளது.

மேகாலாயவில் வில்லியம் நகர் தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜொனோதோன் சங்மா குண்டுவெடிப்பில் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலாயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாகலாந்தில் வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி கட்சி தலைவர் நேபியோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களையும் பிடிக்க பாரதியஜனதா கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களில் பாரதியஜனதா தனக்கென தனி இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சித்து வருகிறது.

இந்த தேர்தல்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸின் கொள்கையை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஒரு தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கிளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திரிபுரா, மேராகாய, நாகலாந்து ஆகிய 3 மாநில வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 3ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.