மக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்:

‘‘பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது பொதுமக்கள் உயிருக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என பாதுகாப்பு படையினரை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து பாதுகாப்பு படை மற்றும் நுண்ணறிவு முகமைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில் நடந்தது. இதில் எல்லை மற்றும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவு மேற்கொண்டார்.

இதில் மெஷபூபா மேலும் பேசுகையில், ‘‘ரமலான் மாதம், சுற்றுலா பயணிகள், அமர்நாத் யாத்ரா போன்று பல்வேறு சூழ்நிலைகளில் சீரமைககப்பட்ட பொறுப்புடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர் வரும் புனித மாதத்தில் பாதுகாப்பான சூழ்நிலையையும், மக்கள் சுதந்திரமான நடமாடக் கூடிய சூழலையும் பாதுகாப்பு துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

மக்களை கையாளும்போது, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் அர்த்தமுள்ள முறையை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் அவர்கள் இந்த சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை அளிக்க முடியும். சமுதாயம் சார்ந்த பணிகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து முகமைகளும ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’என்றார்

இதில் துணை முதல்வர் கவீந்தர் குப்தா மற்றும் உயர் ராணுவம், துணை ராணுவம், போலீஸ், மாநில நுண்ணறிவுப் பிரிவு அதிகாரகள் கலந்துகொண்டனர்.