பாஜகவுக்கு மெகபூபா முப்தி கடும் எச்சரிக்கை

ஸ்ரீநகர்

பிடிபி கட்சியை உடைத்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும் என பாஜகவுக்கு மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தியின் பிடிபி (மக்கள் ஜனநாயகக் கட்சி) மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.   இந்நிலையில் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் பிடிபி கட்சியுடன்  பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டது.   அதை ஒட்டி முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா ராஜினாமா செய்தார்.

தற்போது பிடிபி கட்சியில் மெகபூபாவுக்கு எதிராக அதிருப்தி குரல்கள் எழுந்து வருகின்றன.   கட்சியை தனது குடும்பத்தினர் பிடியில் வைத்திருக்க மெகபூபா முயற்சி செய்வதாக சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி எழூப்பி வருகின்றனர்.     இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் இந்த உறுப்பினர்கள் கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பாரகள் எனவும் செய்திகள் வருகின்றன.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா முப்தி, ”எங்கள் கட்சியை உடைக்க பாஜக முயல்கிறதாக செய்திகள் வருகின்றன.   அப்படி எங்கள் கட்சி உடைக்கப்பட்டால்  காஷ்மீர் பிரச்னை பெரியதாகும்.   மேலும் சலாஹுதின், யாசின் மாலிக் போன்ற பிரிவினை வாதிகளை அது உருவாக்கும்.   கடந்த 1987 ஆம் வருடம் நடந்தது போல வாக்களிக்கும் உரிமையை மக்களுக்கு டில்லி அரசு அளிக்க மறுத்தால்  பிரிவினை வாதங்கள் உருவாகும்.

அதற்குப் பிறகு நானும் சலாஹுதீன் மற்றும் யாசிக் மல்லிக் வழியில் சிந்திக்க வேண்டி வரும்.    எங்களுடைய பிடிபி கட்சியை உடைக்க நினைத்தால் காஷ்மீரில் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.   எங்கள் கட்சியை உடைக்கும் முன்பு அதை எதிர்கொள்ள டில்லி அரசு தயாராகட்டும்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You may have missed